கலப்பையுடன் வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

இராமநாதபுரம் நகராட்சியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோமணம் கட்டி, கலப்பையுடன் வந்து வேட்பு மனுவை தாக்கல்.;

Update: 2022-02-04 14:30 GMT

வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்கள்.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. இதனால் தேர்தல் நடக்கும் பகுதிகளில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் இன்று தங்களுடைய வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்நிலையில் இராமநாதபுரம் நகராட்சியில் 10 வது வார்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கோபால் விவசாயி போல் வேடமணிந்து, கோமணம் கட்டி கலப்பை மற்றும் கரும்புடன் வந்து தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் பலவிதமாக வேடமணிந்து தங்களுடைய வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், கோமணம் கட்டி கலப்பை மற்றும் கரும்புடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த கோபால் அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்தார்.

Tags:    

Similar News