காமராஜர் பிறந்த நாள் விழா. தமாகா வினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
இராமநாதபுரம் மாவட்ட த.மா.கா கட்சியின் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.;
இராமநாதபுரம் அரண்மனை முன்பாக தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் நாகேஸ்வரன் தலைமையில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அரண்மனை முன்பு காமராஜர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. கொரோனா தொற்றால் முககவசம் அணிய வலியுறுத்தும் விதமாக வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு முககவசம் வழங்கினர்.
மாவட்ட தலைவர் நாகேஸ்வரன் கூறுகையில்: தமிழ்மாநில கட்சியின் தலைவர் முன்னாள் மத்திய அமைச்சர், மாநிலங்களவை உறுப்பினர் ஜிகே.வாசன் ஆணைக்கிணங்க, மாநிலம் முழுவதும் தமாக சார்பில் மாவட்ட தலைநகரில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழாவை கொண்டாட வேண்டும் என அறிவித்திருந்தார். அதனடிப்படையில் இராமநாதபுரம் தமாக சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டப்பட்டது என்றார். மாவட்ட இளைஞர் அணி தலைவர் முகேஷ்குமார். மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் செந்தில்குமார், நகர் தலைவர்கள் ராமநாதபுரம் சண்முகராஜேஸ்வரன், ராமேஸ்வரம் ராமகிருஷ்ணன், மண்டபம் மேற்கு வட்டார தலைவர் ராஜேஸ்வரன், கிழக்கு வட்டார தலைவர் சுரேஷ்குமார், விவசாய அணி மாவட்ட தலைவர் ஏகாம்பரம், மாவட்ட துணை தலைவர் புல்லாணி, ராமநாதபுரம் தெற்கு வட்டார தலைவர் மாரி, வடக்கு வட்டார தலைவர் அருளானந்தம், தொழிலாளர் அணி மாவட்ட தலைவர் சத்தீஸ்வரன், திருவாடானை வடக்கு வட்டார தலை அப்பாபு, ஆர்எஸ்.மங்கலம் வட்டார தலைவர் ஸ்டாலின், மாவட்ட செயலாளர்கள் பட்டாணி, தர்மராஜ், கீழநாகாட்சி ஊராட்சி தலைவர் வெள்ளைசாமி மற்றும் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.