நம்புதாளை ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு: கலெக்டருக்கு ஊராட்சி தலைவர் மனு

நம்புதாளை ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் கலெக்டருக்கு ஊராட்சி தலைவர் மனு அளித்துள்ளார்.

Update: 2022-04-07 07:55 GMT

பைல் படம்.

இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி திருவாடானை தாலுகா நம்புதாளை ஊராட்சி அதிக மக்கள் தொகை கொண்ட ஊராக இருந்து வருகிறது. இந்த ஊராட்சிக்கு தினமும் சுமார் 40 ஆயிரம் லிட்டர் குடிநீர் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் ஊராட்சி பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு தினமும் குடிநீர் வழங்க முடியவில்லை.

அதன் அடிப்படையில் ஒவ்வொரு குடியிருப்பு பகுதிக்கும் சுழற்சி முறையில் 10 தினங்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால் ஒரு குடும்பத்திற்கு குறைந்தபட்சமாக மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே நம்புதாளை ஊராட்சிக்கு மக்கள்தொகைக்கு ஏற்ப தினமும் கூடுதலாக குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நம்புதாளை ஊராட்சி தலைவர் பாண்டிச்செல்வி ஆறுமுகம், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News