பெரம்பலூர் மருதையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பெரம்பலூர் மருதையாறு நீர்தேக்கம் நிரம்பியதால், அதன் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2021-10-11 14:45 GMT

மருதையாறு நீர்த்தேக்கம் நிரம்பி உள்ளதால், அதை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் கொட்டரை கிராமத்தின் அருகே மருதையாற்றின் குறுக்கே, மருதையாறு நீர் தேக்கம் அமைந்துள்ளது. இதன் நீர்மட்டம் 87.50 ச.க.ம அளவை எட்டியுள்ளது. இது, அடுத்த 48 மணி நேரத்திற்குள் முழு அளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முழு அளவை நீர்மட்டம் எட்டியதுடன் நீர்தேக்கத்திற்கு வரும் முழுநீர் வரத்தும் மருதையாற்றில் வெளியேறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மருதையாறு ஆற்றின் கரையோர மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் , விவசாயிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்து கண்காணிக்குமாறு, வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினரை, மருதையாறு வடிநில உப கோட்ட உதவி செயற்பொறியாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

Similar News