அருவியில் குளிக்க சென்றபோது பள்ளத்தில் தவறி விழுந்த தொழிலாளி மீட்பு

தீயணைப்பு துறையினர் 100 அடி ஆழம் உடைய பள்ளத்தாக்கில் கயிறு கட்டி கீழே இறங்கி சென்று அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்

Update: 2023-11-16 13:54 GMT

அருவியில் குளிக்க சென்றபோது தவறி விழுந்தவரை மீட்கும் பணி 

நீலகிரி மாவட்டம் குன்னூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் குன்னூர்- மேட்டுப்பாளை யம் மலைபாதையில் பல்வேறு இடங்களில் புதிதாக நீர்வீழ்ச்சிகள் உருவாகி உள்ளன. அவற்றில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

குன்னூர் அடுத்த சேலாஸ் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது46). கூலித்தொழிலாளி. அவர் குரும்பாடி அருகே உள்ள அருவியில் குளிக்க சென்றார். அப்போது அவர் கால் தவறி 100 அடி பள்ளத்தாக்கில் விழுந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் இதுகுறித்து காவல்துறையினருக்கு  உடனடியாக தகவல் அளித்தனர். தகவலின்பேரில் காவல்துறையினர்  மற்றும் தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

தொடர்ந்து அவர்கள் 100 அடி ஆழம் உடைய பள்ளத்தாக்கில் கயிறு கட்டி கீழே இறங்கி சென்று, 4 மணி நேரம் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது ரவிச்சந்திரன் பள்ளத்தாக்கின் மத்தியில் தலை மற்றும் கால்களில் படுகாயங்களுடன் கிடப்பதை பார்த்தனர்.

உடனடியாக அவரை மீட்டு மேலே கொண்டு வந்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் அங்குள்ள அரசு மருத்துவம னையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

Tags:    

Similar News