தார்ச்சாலை இல்லாத எள்ளீஸ்பேட்டை
எள்ளீஸ்பேட்டை மக்கள், தார்ச்சாலை அமைக்க வேண்டி கலெக்டர் அலுவலகத்தில் மனு;
எல்லீஸ்பேட்டை மக்கள் தார்ச்சாலை வசதி கோரி மனு
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகேயுள்ள எல்லீஸ்பேட்டை மற்றும் அண்ணா காலனியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். 1989ஆம் ஆண்டில் வருவாய் துறை மூலம் நிலவரி பட்டா வழங்கப்பட்டிருந்தாலும், இதுவரை அப்பகுதிக்கு தார்ச்சாலை அமைக்கப்படவில்லை. சாலை அமைப்பதற்கான நிலத்தை அவர்கள் வழங்கியிருந்தும் அதிகாரிகள் சாலை அமைக்க முன்வரவில்லை. இதனால் குழந்தைகள் மற்றும் முதியோர் நடந்து செல்வதிலும், வாகனங்களில் பயணிப்பதிலும் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். அவசரகால மருத்துவ தேவைகளுக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் வருவதற்கும் சிரமமாக உள்ளதால், அப்பகுதிக்கு உடனடியாக தார்ச்சாலை அமைத்துத் தரவேண்டும் என்று மக்கள் தங்கள் மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.