நீலகிரி மாவட்டத்தில் இரவில் உலா வந்த காட்டு யானை கடைகளை உடைத்து சேதப்படுத்தியது.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து மைசூர் செல்லும் தொரப்பள்ளி எனும் பகுதியில் இரவில் உலா வந்த காட்டு யானை அங்கிருந்த கடையை சேதப்படுத்தியது.கடந்த வாரம் இரண்டு யானைகள் சாலையில் உலா வந்ததால் வாகன ஓட்டிகளும் வியாபாரிகளும் பொதுமக்களும் மிகுந்த அச்சம் அடைந்தனர்.இந்நிலையில் நேற்று இரவு இப்பகுதியில் உலா வந்த காட்டு யானை அங்கிருந்த சிப்ஸ் கடையை சேதப்படுத்தியது. இதனால் கடையில் இருந்தவர்கள் வெளியே வராமல் கடையினுள் தஞ்சமடைந்தனர்.
யானை, கடையின் முன்பு சேதப்படுத்தி செல்லும் காட்சியை கடைக்காரர் தனது செல்போனில் பதிவு செய்துள்ள காட்சி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.அடிக்கடி யானைகள் உலா வருவதைக் கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் வனத்துறையினர் யானைகளை விரட்ட வேண்டும் என அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.