உதகையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்தவர்கள் கைது
எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் பேரணிக்கு போலீசார் அனுமதி வழங்காததை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
சென்னை, சேலம் ஆகிய இடங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் பேரணி நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்டனர். பேரணிக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. பேரணி செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்தனர். இதை கண்டித்து தமிழகம் முழுவதும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம் உதகையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் பேரணிக்கு போலீசார் அனுமதி வழங்காததை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முக்கிய இடங்களில் நடைபெறும் பேரணிக்கு போலீசார் அனுமதி வழங்காததை கண்டித்தும், அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறத்தப்பட்டது.
சாலையின் குறுக்கே போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.