மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று கோடநாடு வழக்கு விசாரணை

கடந்த செப் 2 ல் நடந்த விசாரணையின் போதுஅரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டதையடுத்து இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.;

Update: 2021-10-01 05:00 GMT

மாவட்ட நீதிமன்றம் (பைல் படம்).

கடந்த செப் 2 ம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்றும் சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ள கூடுதல் கால அவகாசம் அரசு தரப்பில் கேட்கப்பட்டது. இதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்து இவ்வழக்கை அக்டோபர் 1 ஆம் தேதி ஆன இன்று ஒத்திவைத்தது .

இதனிடையே உதகையில் உள்ள பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர், நீலகிரி மாவட்ட எஸ்பி ஆஷிஸ் ராவத், ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கொண்ட தனிப்படை குழு குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளிடம் விசாரணையை மேற்கொண்டனர்.

நான்கு வார கால அவகாசத்திற்கு பின் இன்று இந்த வழக்கு விசாரணை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு வரவுள்ளது. இந்த நான்கு வார காலத்தில் விசாரணை மேற்கொண்ட வர்களிடம் பெறப்பட்ட விசாரணை அறிக்கையை இன்று நீதிபதி முன்பு தாக்கல் செய்யப்படுமா அல்லது கால அவகாசம் கேட்கப்படுமா என எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

Tags:    

Similar News