உதகையில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
உதகையில், மதச்சார்பற்ற ஜனதாதளம்கட்சி சார்பில், காமராஜரின் 119வது பிறந்த தினவிழா கொண்டாடப்பட்டது.;
உதகை காமராஜ் பவனில், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியினர் இனிப்பு வழங்கி காமராஜர் பிறந்தநாளை கொண்டாடினர்.
பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜரின் 119 வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. உதகை மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி அலுவலகத்தில், காமராஜரின் புனித அஸ்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பில், காமராஜ் பவனில் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
அதன் ஒருபகுதியாக, அலங்கரிக்கப்பட்ட அவரது படத்திற்கு கட்சியினர் மலர் தூவி மரியாதை செய்தனர். அக்கம்பக்கத்தில் இருந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கினர். அத்துடன், போதித்த வழிமுறைகளை உறுதிமொழியாக எடுத்துக் கொண்டனர்.