உதகையில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் துண்டு பிரசுரம் விநியோகம்

பணிநீக்கம் செய்யப்பட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களை மீண்டும் பணி அமர்த்த வேண்டி துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

Update: 2021-09-14 07:18 GMT

உதகையில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் துண்டு பிரசுரம் விநியோகம்.

தமிழ்நாட்டில் கடந்த 2008-ம் ஆண்டு 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. தற்போது 1300-க்கும் மேற்பட்ட இலவச 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சேவையில் அவசரகால மருத்துவ நுட்புனர் மற்றும் பைலட்டுகள் என 6500க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதேபோல் கரூர், தஞ்சாவூர், அரியலூர் மாவட்டத்திலும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சட்டத்திற்கு புறம்பாக பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதை கண்டித்தும், அவர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என வலியுறுத்தியும் நாளை (புதன்கிழமை) சென்னையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் தலைமை அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதற்கு பொது மக்களிடம் ஆதரவு கேட்டு நேற்றும் இன்றும் நீலகிரி மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனர். இதில் மாவட்ட பெறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News