சோலூர் பேரூராட்சியில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், தடுப்பூசி போடப்பட்டது, சிறந்த 3 கிடேரி கன்றுகளுக்கு பரிசு வழங்கப்பட்டது

Update: 2023-10-22 15:24 GMT

நீலகிரி மாவட்டம், சோலூர் பேரூராட்சிக்குட்பட்ட வள்ளுவர் நகர் கால்நடை மருந்தக வளாகத்தில், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில், சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட கலெக்டர் அருணா தொடங்கி வைத்தார்.

முகாமில், கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், ஆண்மை நீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், செயற்கைமுறை கருவூட்டல் செய்தல், மலடு நீக்க சிகிச்சை செய்யப்பட்டது.

இதுதவிர சினை பரிசோதனை செய்தல், சிறு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளுதல், தாது உப்பு கலவை வழங்குதல், கால்நடைகளுக்கான சிறு கண்காட்சி அமைத்தல் ஆகியவை மேற்கொள்ளப்பட்டது.

முகாமில், சிறந்த கிடேரி கன்றுகளுக்கான பரிசுகள் 3 பேருக்கும், கால்நடை வளர்ப்பில் சிறந்த பராமரிப்பு மேலாண்மைக்கான பரிசுகளை 3 பேருக்கும், 10 பயனாளிகளுக்கு மினரல் மிக்சர் பாக்கெட்டுகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கி, பாராட்டி னார்.

முன்னதாக, முகாமில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

முகாமில், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர். பகவத்சிங், முதன்மை நோய் நிகழ்வியல் அலு வலர் டாக்டர்.சத்திய நாராயணன், ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் மகராஜ், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர்கள் டாக்டர். எஸ்.பார்த்தசாரதி(ஊட்டி), டாக்டர். நீலாவண்ணன்(கூடலூர்), பேராசிரியர் மற்றும் தலைவர், எஸ்.பி.ஆர்.எஸ் சாண்டி நல்லா டாக்டர். என்.பிரேமா, கால்நடை உதவி மருத்துவர்கள் டாக்டர். எம்.நாகஜோதி (சோலூர்), டாக்டர்.எம்.ராஜமுரளி (ஊட்டி), டாக்டர். ஏ.பொன்கலையாணி (ஊட்டி), மருதனிராஜ் (தலைகுந்தா),டாக்டர்.மேஜர் கணேஷ் (டி-ஆர்.பஜார்). சோலூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஹர்ஷத் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News