கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு விற்பனைக்கு வந்துள்ள விதவிதமான கேக்குகள்

கிறிஸ்துமசுக்கு இன்னும் ஒரு நாளே இருப்பதால் கேக் விற்பனை சூடுபிடித்து உள்ளது. ஒரு கிலோ கேக் ரூ.1800க்கு விற்பனையாகி வருகிறது.;

Update: 2023-12-24 15:45 GMT

கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகின்றனர். கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகள் முன்பு ஸ்டார்களை தொங்க விடுவது, குடில்களும் வைத்துள்ளனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையில் முக்கிய இடம் பிடிப்பது கேக் தான். கிறிஸ்தவர்கள் தங்களது உறவினர்கள் மற்றும் தங்களது நண்பர்களுக்கு கிறிஸ்துமஸ் தினத்தன்று கேக் வாங்கி கொடுப்பது வழக்கம்.

இதனை அடுத்து அனைத்து பேக்கரிகளிலும் கேக் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்திலும் கிறிஸ்துமஸ் பண்டிகை களை கட்ட தொடங்கி உள்ளது.

அங்குள்ள தேவாலயங்கள் அனைத்தும் மின்னொளியில் ஜொலிக்கின்றன. அங்கு கிறிஸ்து பிறப்பை உணர்த்தும் வகையிலான குடில்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர வீடுகள் மற்றும் கடைகளிலும் ஸ்டார்கள் தொங்கவிட்டு, குடில்களும் அமைத்துள்ளனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நீலகிரியில் உள்ள பேக்கரிகளில் கேக் வகைகள் மற்றும் ஹோம்மேட் சாக்லேட்டுகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. கிறிஸ்துமசுக்கு இன்னும் ஒரு நாளே இருப்பதால் கேக் விற்பனை சூடுபிடித்து உள்ளது. இந்த கேக்குகளிலும் மக்களை கவரும் வகையில், பல்வேறு வகையில் கேக்குகளை தயாரித்து வருகின்றன.

அந்த வகையில், சதுரம், வட்டம் மட்டுமின்றி கிறிஸ்துமஸ் தாத்தா, மயில், ரோஜா மலர் மற்றும் பல்வேறு வடிவங்களிலும் கேக்குகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர இயேசு கிறிஸ்து பிறப்பை உணர்த்தும் வகையிலான குடிலை போன்றும் கேக்குகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இதனை கடைக்கு வரும் மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து தங்களுக்கு பிடித்தமான கேக்குகளை வாங்கி செல்கிறார்கள். ஒரு கிலோ கேக் ரூ.1800க்கு விற்பனையாகி வருகிறது. கடந்த ஆண்டு 1 கிலோ கேக் ரூ.600க்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று நீலகிரி மாவட்டத்தில் ஹோம்மேட் சாக்லேட் தயாரிப்பு பணியும் மும்முரமாக நடந்து வருகிறது. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளி மாவட்டங்களில் இருந்து இங்கு சுற்றுலா வந்துள்ள மக்களும் தங்களுக்கு பிடித்தமான கேக் வகைகள் மற்றும் ஹோம்மேட் சாக்லேட்டுகளை வாங்கி செல்கின்றனர்.

இதனால் நீலகிரியில் உள்ள அனைத்து பேக்கரிகளிலும் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

Tags:    

Similar News