காலி குடங்களுடன் சாலை மறியல்

கூடலூர் அருகே 1 வாரமாக குடிநீர் வராததை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் அரசு பேருந்தை மறித்து சாலை மறியல் செய்தனர்.

Update: 2021-03-07 02:38 GMT

நீலகிரி மாவட்டத்தில் குடிநீர் முறையாக வராததால் காலி குடங்களுடன் பொது மக்கள் போராட்டம் நடத்தினர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவாலா அட்டி பகுதியில் கடந்த ஒரு வாரமாக சுத்தரிக்கப்பட்ட குடிநீர் முறையாக வராததால், பாண்டியார் பொன்னம்பலம் ஆற்றில் ஓடும் சுகாதாரமற்ற குடிநீரை குடிக்க வேண்டிய சூழ்நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் குழந்தைகள் மற்றும் முதியோருக்கு வயிற்றுப் போக்கு போன்ற பல்வேறு வியாதிகள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே சுத்தரிக்கப்பட்ட குடிநீரை முறையாக வழங்க வலியுறுத்தி ஏராளமான பெண்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News