ஊட்டியில் பூத்துக்குலுங்கும் சீனாவின் அரசி

Update: 2021-02-06 06:15 GMT

ஊட்டி பூங்காவில் சீனாவின் அரசி என்று அழைக்கப்படும் பவுலோனியா மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நூற்றுக்கணக்கான மரங்கள் உள்ளன அதே போல் ஆயிரக்கணக்கான மலர்களும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வருகின்றன.அந்தவகையில் சீனாவை தாயகமாகக் கொண்ட பவுலோனியா மரத்தில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன.வறட்சியை தாங்கி வளரும் தன்மையுடைய இந்த மலர்கள் சுற்றுலா பயணிகளுக்கு கண்களுக்கு விருந்தளிக்கிறது. உலகிலேயே அதிவேகமாக வளரும் மரமாக இது உள்ளது.

புதிதாக திருமணமான ஜப்பான் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தால் உடனடியாக அவர்கள் செய்யும் முதல் வேலை தங்கள் வீட்டருகே ஒரு பவுலோனியா மரத்தை நடுவது தான். பெண்பிள்ளை வளர்ந்து திருமண வயதை எட்டும்போது அந்த மரமும் முழு வளர்ச்சி அடைந்திருக்கும். அப்போது ஜப்பான் தம்பதியர் தங்களது மகளின் திருமணத்தின் போது பவுலோனியா மரத்தை வெட்டி அதில் வீட்டுக்கு தேவையான மேஜை நாற்காலிகளை அழகாக வடிவமைத்து தங்களது பெண்ணிற்கு சீதனமாக தருவார்களாம்.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உயிர் இழப்புகள் நடந்து வரும் நிலையில் சீனாவின் அரசி என்று அழைக்கப்படும் பவுலோனியா மரத்தில் மலர்கள் பூத்து இருப்பது உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சற்று ஆறுதலாக உள்ளது.

Tags:    

Similar News