திருச்செங்கோட்டில் மரம் நடும் விழா: அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்பு

திருச்செங்கோடு அருகே மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு மரக்கன்றுகளை நட்டார்.;

Update: 2023-06-30 13:30 GMT

திருச்செங்கோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு மரக்கன்றுகளை நட்டார். அருகில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட கலெக்டர் உமா, எம்எல்ஏ ஈஸ்வரன் ஆகியோர்.

திருச்செங்கோடு அருகே மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு மரக்கன்றுகளை நட்டார்.

மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாநிலம் முழுவதும், நெடுஞ்சாலைத்துறை சார்பில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநில நெடுஞ்சாலைகளில் இடைவெளி இல்லாமல் மரங்கள் வளர்க்கப்பட்டு, இலக்கு எட்டப்படும் என்று சட்டசபையில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, கடந்த 7ம் தேதி சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை முதலமைச்சர் ஸ்டாலின் மரக்கன்று நட்டு வைத்து தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து நாமக்கல் நெடுஞ்சாலை கோட்டத்தின் சார்பில் 12,000 மரக்கன்றுகள் நடும் பணி, கடந்த ஜூன் 8ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதையொட்டி இன்று, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுக்கா, சிறுமொளசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். நிகழ்ச்சியில் தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட கலெக்டர் உமா, திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன், திருச்செங்கோடு ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் மதுரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நாமக்கல் நெடுஞ்சாலை கோட்டத்தில் 1,800 வேம்பு மரக்கன்றுகள், 1,800 புங்கன் மரக்கன்றுகள், 2,000 வசந்த ராணி மரக்கன்றுகள், 1,700 பாதணி மரக்கன்றுகள், 1,700 நாவல் மரக்கன்றுகள், 1,500 நீர்மருது மரக்கன்றுகள், 1,500 அத்தி மரக்கன்றுகள் என மொத்தம் 12,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்படவுள்ளது. மேலும், பருவமழைக்கு முன்பாகவே அனைத்து மரக்கன்றுகளையும் நடுவதற்கு திட்டமிடப்பட்டு இதுவரை வரை 3,000 மரக்கன்றுகள் நாமக்கல் மாவட்டத்தில் நடப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் திருகுணா, திருச்செங்கோடு ஆர்டிஓ கவுசல்யா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

Tags:    

Similar News