திருச்செங்கோடு:தாயை கொன்ற மகன் மற்றும் நண்பர் கைது

நடத்தையில் சந்தேகத்தால், தாயாரை கொலை செய்த மகன் அவரது நண்பன் இருவரையும், 3 ஆண்டுகளுக்கு பின், போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-20 07:00 GMT

திருச்செங்கோடு அடுத்த ஆனங்கூர் பட்டணத்து மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியராஜன், இவரது மகன் வெங்கடேசன். கடந்த 2018ம் ஆண்டு ஏப்.8ம் தேதி வெங்கடேசன் திருச்செங்கோடு டவுன் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், அன்று இரவு தனியாக இருந்த தனது தாயார் ராஜலட்சுமியை யாரோ தாக்கி கொலை செய்துவிட்டாக கூறியிருந்தார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 3 ஆண்டுகளாக குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர்.

இந்தநிலையில், சேலம் சரக டி.ஐ.ஜி. மகேஸ்வரி, நாமக்கல் எஸ்.பி. சரோஜ்குமார் தாக்கூர் ஆகியோர் உத்தரவின் பேரில், டி.எஸ்.பி செல்வம் நேரடி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பாஸ்கரபாபு தலைமையில் தனிப்படை அமைத்து இந்த வழக்கில் விசாரனை நடைபெற்றது. விசாரணையில், வெங்கடேசன் மற்றும் அவரது நண்பர் பிரபாகரன் ஆகியோர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து வந்தனர். இதற்கிடையில், போலீசாருக்கு பயந்த இருவரும், சீத்தாராம்பாளையம் வி.ஏ.ஓ முன்பு சரணடைந்தனர். பின்னர் அவர்கள் திருச்செங்கோடு டவுன் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது: வெங்கடேசன் தந்தை பாண்டியராஜனுக்கும், தாயார் ராஜலட்சுமிக்கும் குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது. அதனால், பாண்டியராஜன் தனது மனைவியை விட்டு பிரிந்து சென்று விட்டார். அதில் இருந்து, வெங்கடேசனின் தாயார் நடத்தை சரியில்லாமல் நடத்துகொண்டதாக கூறப்படுகிறது. இது வெங்கடேசனுக்கு அவமானமாக இருந்தது.

எனவே, அவர் தனது தாயாரைக் கொலை செய்ய திட்டமிட்டார். அதற்காக, தனது நண்பர் பிரபாகரன் உதவியுடன், 2018, ஏப்., 7ம்தேதி இரவு 1 மணிக்கு, தூங்கிக் கொண்டிருந்த தனது தாயார் ராஜலட்சுமியின் தலையில் கட்டையால் தாக்கி கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையொட்டி போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர். கொõலை வழக்கில் 3 ஆண்டுகளுக்கு பின், துப்புதுலக்கி குற்றவாளிகளைக் கைது செய்த டி.எஸ்.பி செல்வம், இன்ஸ்பெக்டர் பாஸ்கரபாபு உள்ளிட்ட போலீசாருக்கு எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் பாராட்டு தெரிவித்தார்.

Tags:    

Similar News