நாமக்கல்லில் 15-ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு பற்றி இலவச பயிற்சி

Free Training - நாமக்கல்லில்t வருகிற 15-ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு பற்றி இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.;

Update: 2022-09-09 03:30 GMT

Free Training - நாமக்கல்லில் வரும், 15ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி நடைபெறுகிறது. இது குறித்து நாக்கல் வேளாண் அறிவியில் நிலைய தலைவர் அழகுதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 15ம் தேதி, காலை 9 மணிக்கு, புறக்கடை மற்றும் தீவிர முறையில் நாட்டுக்கோழி வளர்ப்புக்கு ஏற்ற தொழில் நுட்பங்கள் என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. இப்பயிற்சியில், புறக்கடை மற்றும் தீவிர முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு தொழில் நுட்பங்கள், நாட்டுக்கோழி இனங்கள், நவீன கோழி வளர்ப்பு முறைகள், தீவன அளவுகள், குஞ்சு பொறிக்கும் விதம், குஞ்சு பொறிப்பான்களின் பயன்கள் குறித்து விளக்கப்படுகிறது.

மேலும், நாட்டுக்கோழிகளை தாக்கும் நோய்கள், அறிகுறிகள், அவற்றை தடுக்கும் முறைகள், நாட்டுக்கோழிகளை பராமரிக்கும் முறைகள் பற்றியும் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதில், விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள், வேளாண் அறிவியல் நிலையத்தை நேரிலோ அல்லது 04286 266345, 266650 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு, தங்களது பெயரை முன்பதிவு செய்து பயன்பெறலாம். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News