திருச்செங்கோடு நகராட்சியில் போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்எல்ஏ தோல்வி

திருச்செங்கோடு நகராட்சியில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போடியிட்ட முன்னாள் அதிமுக எம்எல்ஏ சரஸ்வதி தோல்வி.;

Update: 2022-02-22 08:00 GMT

திருச்செங்கோடு நகராட்சித் தேர்தலில், வார்டு கவுன்சிலர் பதவிக்கு போடியிட்ட முன்னாள் அதிமுக எம்எல்ஏ சரஸ்வதி 122 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சித் தலைவராக கடந்த 2011-2016 ஆண்டுகளில் பொன் சரஸ்வதி பணியாற்றினார். பின்னர் 2016-2021ம் ஆண்டில் அதிமுக சார்பில் திருச்செங்கோடு சட்டசபை தொகுதியில், எம்ல்ஏ பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து, 2021ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில், திருச்செங்கோடு சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பொன்சரஸ்வதி தோல்வியடைந்தார்.

இந்த நிலையில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் பொன் சரஸ்வதி, திருச்செங்கோடு நகராட்சி 23வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையில் 23வது வார்டு அதிமுக வேட்பாளர் பொன்சரஸ்வதி 839 ஓட்டுகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்டு திமுக வேட்பாளர் புவனேஸ்வரி 1,061 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.

Tags:    

Similar News