திருச்செங்கோடு அருகே தனியார் வங்கி அதிகாரி விஷம் குடித்து தற்கொலை
திருச்செங்கோடு அருகே தனியார் வங்கி அதிகாரி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
பைல் படம்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே மோர்பாளையத்தில் உள்ள தனியார் வங்கியில், விருதுநகர் மாவட்டம் நல்லாம்பட்டி பகுதியை சேர்ந்த அருண் ( 27) என்பவர் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகாததால், மோர்பாளையத்தில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் அருண் கடந்த சில மாதங்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று அவருக்கு வயிறு வலி அதிகமாகமனது, இதனால் விரக்தி அடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக, மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அருண் உயிரிழந்தார். இதுகுறித்து மல்லசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.