சேந்தமங்கலம் அருகே பைக் மீது லாரி மோதி பால் பண்ணை தொழிலாளி பலி
சேந்தமங்கலம் அருகே லாரி மோதியதால் பால்பண்ணை தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.;
சேந்தமங்கலம்:
சேந்தமங்கலம் அருகே உள்ள முத்துகாப்பட்டி புதுக்கோம்பையைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (32). அவர் அக்கியம்பட்டியில் உள்ள ஒரு தனியார் பால் பண்ணையில் பணிபுரிந்து வந்தார்.
சம்பவத்தன்று அவர் வடுகப்பட்டி - அலங்காநத்தம் பிரிவு ரோடு அருகே மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி ஒன்று அவர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்து வந்த சேந்தமங்கலம் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்த தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.