பஞ்சாயத்து ஆபீஸ் முன் மழைநீர் தேக்கம்: கவுன்சிலர்கள் கப்சிப்

செவ்வந்திப்பட்டி பஞ்சாயத்து அலுவலகம் முன்பு, மழைநீர் தேங்கியுள்ளதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். கவுன்சிலரும் கண்டு கொள்வதில்லை.

Update: 2021-12-01 02:15 GMT

செவ்வந்திப்பட்டி பஞ்சாயத்து அலுவலகம் முன்பு, குட்டைபோல் தேங்கியுள்ள மழைநீர்.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம்,  செவிந்திப்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்தின் முன்பு, மழைநீர் குட்டை போல் தேங்கி உள்ளது. மழைநீரில் ஏராளமான கொசுக்கள் உருவாகிறது. இதனால் டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வர முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இதுகுறித்து,  அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்ததாவது: செவ்வந்திப்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்தின் முன்பு மழை நீர் தேங்கியுள்ளது. இதுகுறித்து பல முறை இது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும்,  எந்த பயனும் இல்லை. புதிதாக பொறுப்பேற்றுள்ள எம்எல்ஏ பொன்னுசாமியிடம் தெரிவித்தும் இதைப்பற்றி கண்டுகொள்ளவில்லை. பல முறை மனுவும் கொடுத்துள்ளோம்.

மாவட்ட கவுன்சிலரும்,  இதே பஞ்சாயத்தில் தான் வசித்து வருகிறார். மக்கள் அதிகம் பயன்படாத இடங்களில் சிமெண்ட் சாலை அமைக்கிறார். ஆனால் தேவை இருக்கும் இடத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்க மறுக்கிறார். அரசு அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. பஞ்சாயத்து அலுவலகத்திற்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே நாமக்கல் கலெக்டர், இதற்கு ஒரு தீர்வு காண வழி வகுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News