நவலடிப்பட்டி பகவதி அம்மன் கோவில் தேர் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
நவலடிப்பட்டி கிராமத்தில், பகவதி அம்மன் கோவில் திருவிழாவில் நடைபெற்ற தோரோட்டத்தில், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நவலடிப்பட்டி கிராமத்தில், பகவதி அம்மன் திருவிழாவில் நடைபெற்ற தோரோட்டத்தில், திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பவித்திரம் புதூர் பஞ்சாயத்து, நவலடிபட்டி கிராமத்தில் உள்ள பகவதி அம்மன் மற்றும் அங்கண்ணன் கோயில் தேர்த்திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு, பக்தர்கள் தீர்த்தக்குடம் மற்றும் பால்குடம் எடுத்து வந்து பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. திரளான பக்தர்கள் நிகழ்சியில் கலந்துகொண்டு தேர்வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
தொடர்ந்து பகவதி அம்மனுக்கு 1,008 வளையல் அலங்காரம் செய்யப்பட்டு மாவிளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்தும் நிகழ்ச்சி நடந்தது. இன்று வெள்ளிக்கிழமை ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை ஊர் தர்மகர்த்தாக்கள் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.