கொல்லிமலையில் மக்களைத் தேடி எம்எல்ஏ திட்டம்: எம்எல்ஏ பங்கேற்பு
கொல்லிமலையில் மக்களைத் தேடி எம்எல்ஏ திட்டத்தின் கீழ், சேந்தமங்கலம் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.;
கொல்லிமலையில் மக்களைத் தேடி எம்எல்ஏ திட்டத்தின் கீழ், சேந்தமங்கலம் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
சேந்தமங்கலம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட, கொல்லிமலை பகுதியில் மக்களைத்தேடி எம்எல்ஏ என்ற திட்டத்தின்கீழ், எம்எல்ஏ பொன்னுசாமி பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களைப் பெற்று வருகிறார். கொல்லிமலையில் உள்ள எடப்புளி நாடு, பைல்நாடு, பெரக்கரை நாடு, சித்தூர் நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை அவர் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்ற்றார்.
அப்போது தமிழக அரசின் நலத்திட்டங்களை அவர் பொதுமக்களுக்கு விளக்கி கூறினார். எடப்புளிநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மக்களைத்தேடி மருத்துவத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களை அவர் வழங்கினார். பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.