அரசுப் பள்ளியில் மாணவர்கள் முன் சண்டை: தலைமை ஆசிரியை, ஆசிரியை இடமாற்றம்

எருமப்பட்டி அருகே மாணவர்கள் முன்னிலையில் சண்டையிட்டுக்கொண்ட அரசு பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியை இருவரும் இடமாறுதல் செய்யப்பட்டனர்.

Update: 2021-12-17 03:30 GMT

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், எருமபட்டி ஊராட்சி ஒன்றியம், பெருமாப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியை ஜோதி, இடைநிலை ஆசிரியை ராஜேஸ்வரி ஆகிய இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்தது.

சம்பவத்தன்று இருவரும், மாணவ, மாணவிகள் முன்னிலையில் சண்டை போட்டு கொண்டதாக தெரிகிறது. இந்த நிலையில் 5-ம் வகுப்பு மாணவியை தலைமை ஆசிரியை திட்டியதாக கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் சென்றது.

இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் ஸ்ரேயாசிங், மாவட்ட சிஇஓ மகேஸ்வரிக்கு உத்தரவிட்டார். இதையொட்டி, டிஇஓ ராமன் நேரடியாக அந்த பள்ளிக்கு சென்று மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தினார்.

விசாரணையில், தலைமை ஆசிரியை மற்றும் இடைநிலை ஆசிரியை இருவருக்கும் இடைய சுமூகமான உறவு இல்லை என்பதும், அவர்களுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாட்டால், மாணவர்களின் நலன் பாதிக்கப்படுவதும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் வெவ்வேறு பள்ளிகளுக்கு இடமாறுதல் செய்து டிஇஓ உத்தரவிட்டார். அதன்படி தலைமை ஆசிரியை ஜோதி கரட்டுப்பட்டி பள்ளிக்கும், இடைநிலை ஆசிரியை ராஜேஸ்வரி கொடிக்கால்புதூர் பள்ளிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

Tags:    

Similar News