கொல்லிமலையில் உலக பழங்குடியினர் தின விழாவில் நடனமாடிய அமைச்சர்
கொல்லிமலையில் உலக பழங்குடியினர் தின விழாவில் அமைச்சர் கயல்விழி நடமாடினார்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள, செங்கரையில் உலக பழங்குடியினர் தின விழா நடைபெற்றது. தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் மலைவாழ் மக்களுடன் இணந்து நடனமாடிமகிழ்ந்தார்.
சேந்தமங்கலம் எம்.எல்.ஏ. பொன்னுசாமி, டி.ஆர்.ஓ (பொ) மல்லிகா, பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பிரகாஷ், அட்மா குழுத்தலைவர் செந்தில்முருகன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.