கொல்லிமலை மலைவாழ் மக்கள் வீட்டில் ராகி களி சாப்பிட்ட பாஜ தலைவர் அண்ணாமலை

கொல்லிமலையில் மலைவாழ் மக்கள் வீட்டிற்கு சென்ற அண்ணாமலை, அங்கு தரையில் அமர்ந்து ராகி களியை ருசித்து சாப்பிட்டார்.

Update: 2022-07-22 12:00 GMT

மலைவாழ் மக்களின் பாரம்பரிய உணவான ராகி களியை தரையில் அமர்ந்து சாப்பிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில், பாஜக இளைஞரணி பயிற்சி முகாம் நடைபெற்றது. அதில் கலந்துகொள்வதற்காக, மாநில பாஜக தலைவர் அண்ணாமலை இன்று காலை கொல்லிமலை வந்தார்.

அப்போது, அவர் கொல்லிமலை மலைவாழ் மக்களை சந்தித்து, இந்திய ஜனாதிபதியாக திரவுபதி முர்மு தேர்வு செய்யப்பட்டதை, மலைவாழ்மக்கள் ஒவ்வொருவரும், தங்களுக்கு கிடைத்த வெற்றியாகக் கருத வேண்டும் என்று கூறி அவர்களோடு இணைந்து வெற்றியைக் கொண்டாடினார். அப்போது மலைவாழ் மக்களின் அன்பான அழைப்பை ஏற்று, ஒரு மலைவாழ் மக்கள் வீட்டிற்கு சென்று தரையில் அமர்ந்து, மலைவாழ் மக்களின் பாரம்பரிய உணவான ராகி களி மற்றும் கூட்டுக்குழம்பை ருசித்து சாப்பிட்டார்.

கொல்லிமலை ஒன்றியம் ஆரியூர் நாடு பஞ்சாயத்து, சோளக்காட்டில் நடைபெற்ற பாஜக இளைஞரணி பயிற்சி முகாமில், மாநில பாஜ தலைவர் அண்ணாமலை, தேசிய இளைஞர் அணி தலைவர் தேஜஸ்வி சூர்யா எம். பி. , மாவட்ட பா. ஜ தலைவர் சத்தியமூர்த்தி, பொது செயலாளர் வடிவேல், எஸ். டி. அணி மாநில தலைவர் சிவப்பிரகாசம், இளைஞர் அணி மாநில தலைவர் ரமேஷ்சிவா, இளைஞர் அணி மாநில பொது செயலாளர் ராஜேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News