இராசிபுரம் அருகே வாலிபர் கொலை வழக்கில் பஞ்சாயத்து தலைவர் உட்பட 3 பேர் கைது

இராசிபுரம் அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 10 மாதங்களுக்குப் பின் பஞ்சாயத்து தலைவர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-25 06:30 GMT

பைல் படம்.

இராசிபுரம் அருகே உள்ள, அணைப்பாளையம்-போடிநாயக்கன்பட்டி பைபாஸ் ரோட்டில், கடந்த ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி வாலிபர் ஒருவர் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில், ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், சடலமாக கிடந்தவர் ராசிபுரம் அருகேயுள்ள பல்லவநாயக்கன்பட்டி கிராமம், மேற்கு வலசு அருந்ததியர் தெருவை சேர்ந்த பட்டதாரி வாலிபர் சரவணன் என்பது தெரியவந்தது. பிரேத பரிசோதனை முடிவில் அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையொட்டி போலீசார் நடத்திய தீவிர விசாரனையில், தொட்டியவலசு பஞ்சாயத்து தலைவர் கார்த்திகேயன் ( 45) என்பவர், முன் விரோதம் காரனமாக தனது நண்பர்களுடன் சேர்ந்து சரவணனை கொலை செய்தது தெரியவந்தது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 29-ந் தேதி, மல்லூர் அருகே கார்த்திகேயன், அவருடைய நண்பர்கள் கோபிசங்கர் (36), பிரவீன்குமார் (35) உள்பட 4 பேர் சரவணனை தாக்கியதும், பின்னர் அல்லேரி முனியப்பன் கோவில் செல்லும் வழியில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரி வளாகத்திற்கு அவரைக் கடத்திச் சென்று அடித்துக்கொலை செய்து, உடலை மோட்டார் சைக்கிள் மூலம் எடுத்துச்சென்று அணைப்பாளையம் பகுதியில் ரோட்டில் வீசிச் சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையொட்டி பஞ்சாயத்து தலைவர் கார்த்திகேயன், அவரது நண்பர்கள் கோபிசங்கர், பிரவீன்குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட கோபிசங்கர் மூக்குத்திப்பாளையம் பஞ்சாயத்து தலைவியின் கணவர் என்பதும், பிரவீன்குமார் செல்போன் கடை உரிமையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News