ராசிபுரத்தில் ரூ. 16.28 கோடி மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்தும் பணி துவக்கம்

ராசிபுரத்தில் ரூ. 16.28 கோடி மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்தும் பணியை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.

Update: 2022-06-10 07:30 GMT

ராசிபுரத்தில் ரூ.16.28 கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணிகளை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார். அருகில் ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நெடுஞ்சாலை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்தில் ரூ.16.28 கோடி மதிப்பீட்டில் நெடுங்சாலை அகலப்படுத்தும் பணிகளை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.

ராசிபுரம் உட்கோட்டத்திற்குட்பட்ட மாநில நெடுஞ்சாலையான மல்லியகரை – ராசிபுரம் – திருச்செங்கோடு – ஈரோடு சாலையில், ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் காக்காவேரி முதல் கோனேரிப்பட்டி ஏரிக்கரை வரை 3.75 கி.மீ நீளத்திற்கும், கவுண்டம்பாளையம் பஸ் ஸ்டாப் முதல் ஆண்டகளூர்கேட் வரை 2 கி.மீ நீளத்திற்கும் மற்றும் குருசாமிபாளையத்திலிருந்து பொன்குறிச்சி வரை 2.60 கி.மீ நீளத்திற்கும், மொத்தம் 8.35 கி.மீ நீளத்திற்கு, ரூ.16.28 லட்சம் மதிப்பீட்டில் சாலையை அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணிகள் துவக்க விழா ராஜ்சயபா எம்.பி ராஜேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் பூமி பூஜையில் கலந்துகொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், ராசிபுரம் ஊராட்சி ஒன்றி தலைவர் ஜெகநாதன், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பாலச்சந்திரன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் சந்திரசேகர், பிஆர்ஓ சீனிவாசன், உதவிக்கோட்டப்பொறியாளர் ஜெகதீஸ்குமார், உதவிப்பொறியாளர் மணிகண்டன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News