ராசிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம்: அமைச்சர் ஆய்வு

ராசிபுரம் நகராட்சிப் பகுதியில், ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடம் கட்டுவதற்கான இடத்தை அமைச்சர் மதிவேந்தன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;

Update: 2021-07-06 03:15 GMT

ராசிபுரம் நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, புதிய கட்டிடம் கட்டுவதற்காக இடத்தை, அமைச்சர் மதிவேந்தன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ராசிபுரம் நகர ஆரம்ப சுகாதார நிலையம், தற்போது தாசா தெருவில் செயல்பட்டு வருகின்றது. இங்கு புற நோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, கர்ப்பிணி தாய்மார்களுக்கான பிரிவு, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பிரிவு ஆகியன செயல்பட்டுவருகின்றன. மேலும் கொரோனா பரிசோதனைகளும், கொரோனா நோய்த்தொற்று தடுப்பூசி போடும் பணிகளும் இங்கு நடைபெறுகின்றன.

தினசரி அதிகமான பொதுமக்கள் இங்கு வந்து செல்வதால், இடம் நெருக்கடி ஏற்படுகிறது. எனவே பொதுமக்களின் வசதிக்காக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக ராசிபுரம் அண்ணா காலனி, வார்டு எண்.8ல் அமைந்துள்ள ஹவுசிங் போர்டு காலனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இடங்களை சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில், நன்கொடையாளர் ராஜேஸ்குமார், ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகநாதன், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் அசோக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News