திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் இராசிபுரத்தில் மனித சங்கிலி போராட்டம்

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து ராசிபுரத்தில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.;

Update: 2021-07-28 11:15 GMT

திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில், இராசிபுரத்தில் முன்னாள் அமைச்சர் டாக்டர் சரோஜா தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசைக்கண்டித்து ராசிபுரத்தில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

திமுக ஆட்சிகஅக வந்தால், நீட்தேர்வு ரத்து செய்யப்படும், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும், கேஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும் என்பவை உள்ளிட்ட, பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்து திமுக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற ஆட்சியைப் பிடித்தது. ஆட்சிக்கு வந்த பிறகு கொடுத்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற மறுத்து வருகிறது. இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் போராட்டம் நடைபெறும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்திருந்தனர். இதையொட்டி, இராசிபுரம் நகர அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டாக்டர் சரோஜா தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் திமுக அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் அதிமுகவனர் மீது பொய் வழக்குப் போடும் திமுக அரசைக் கண்டித்தும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட திரளான அதிமுவினர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News