ஈஸ்வரமூர்த்திபாளையத்தில் தார்சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

மண்சாலையை நில அளவை செய்து தார்சாலையாக அமைக்க வேண்டும் என ஈஸ்வரமூர்த்திபாளையம் பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை.

Update: 2021-08-16 10:30 GMT

தார் சாலை அமைத்து தரக்கோரி மனு கொடுப்பதற்காக, ஈஸ்வரமூர்த்திபாளையம் கிராம மக்கள் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.

இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங்கிடம் ஈஸ்வரமூர்த்திபாளையம் பொதுமக்கள் அளித்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது:

நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஈஸ்வரமூர்த்திபாளையம் ஊராட்சி. இங்கு ஒன்டிக்கடை கிழக்கு பாதியில் உள்ள ஆத்தூர் முதல் ராசிபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் இருந்து தரைப்பாலம் முதல் தெற்கு அம்மினிக்குட்டை முனியப்பன் கோவில் வரை செல்லும் பாதை மண்சாலையாக உள்ளது. இந்த பகுதியில் 32 க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பாதை இருந்தும் முன்பகுதியில் உள்ள சிலர் சாலையை ஆக்ரமிப்பு செய்து உள்ளனர். 40 வருடமாக குண்டுகுழியுமாக உள்ள இச்சாலையை சீரமைக்க பஞ்சாயத்து தலைவர் முயற்சி செய்தார். ஆனால் சாலையை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எனவே சாலை நில அளவை செய்து அந்த சாலையை தார்சாலையாக அமைத்து தரவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News