ஜிஎஸ்டி வரி உயர்வு: வெண்ணந்தூரில் விசைத்தறியாளர்கள் ஸ்டிரைக்

ஜவுளித் தொழிலுக்கு ஜிஎஸ்டி வரியை குறைக்கக்கோரி, வெண்ணந்தூரில், விசைத்தறியாளர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-12-11 03:45 GMT

கோப்பு படம்

இராசிபுரம் தாலுக்கா வெண்ணந்தூர் பகுதியில்,  சுமார் 25,000-க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. ஜவுளி உற்பத்திக்கு ஜன. 1 முதல் ஜிஎஸ்டி வரியை 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதற்கு வெண்ணந்தூர் விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் எதிர்ப்புத் தெரிவித்து ஒரு நாள் வேலை நிறுத்தம் நடைபெற்றது. ஜிஎஸ்டி வரி உயர்வைக் கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றறது. வெண்ணந்தூர் விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் மாதேஸ்வரன்,  போராடட்டத்திற்கு தலைமை வகித்தார். வெண்ணந்தூர் முன்னாள் டவுன் பஞ்சாயத்து தலைவர் செல்வம், நகர காங்கிரஸ் தலைவர் சிங்காரம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News