ராசிபுரம் அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கு பெரியார் பல்கலைக்கழக விருது

Teacher Awards -ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள் 3 பேருக்கு பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் ஆசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது.;

Update: 2022-09-06 07:45 GMT

சேலம் பெரியார் பல்கலையில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில், ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி போராசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

Teacher Awards -நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கல்லூரி அரசியல் அறிவியல் துறைத் தலைவராக இருப்பவர் டாக்டர் மேஜர் சிவக்குமார், இவருக்கு பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்ற ஆசிரியர் தினவிழாவில் பல்கலைக்கழக அளவில் 2020-21-ம் ஆண்டின் சிறந்த ஆராய்ச்சியாளர் விருது வழங்கப்பட்டது.

இதே போல் இக்கல்லூரியின் கணிதத் துறை தலைவர் சதாசிவம், 2020-21-ம் ஆண்டின் சிறந்த ஆசிரியருக்கான விருதும், இதே கல்லூரியின் இயற்பியல் துறை இணைப்பேராசிரியர் ஆ.பிரிசில்லா ஜெயக்குமார் 2021-22-ம் ஆண்டின் சிறந்த ஆசிரியருக்கான விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளனர்.

பெரியார் பல்கலைக்கழக செனட் ஹாலில் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் ஜெகந்நாதன் தலைமையில் நடைபெற்ற விழாவில், சேலம் வினாயகா மிஷன் நிகர்நிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சுதிர் விருதுகளை வழங்கினார். பெரியார் பல்கலை பதிவாளர் பாலகுருநாதன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கதிரவன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News