இராசிபுரத்தில் மனைவியை எரித்துக்கொலை செய்ய முயன்ற பெயிண்டர் கைது

இராசிபுரத்தில் மனைவியை எரித்துக்கொலை செய்ய முயன்ற பெயிண்டர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-02-03 23:45 GMT

இராசிபுரம் நகராட்சி, வி.நகர் 18-வது பகுதியில் வசித்து வருபவர் சாகுல் அமீது (39), பெயிண்டிங் தொழிலாளி. இவரது மனைவி பாத்திமா பீபி (29). இவர் நாமகிரிப்பேட்டையில் சத்துணவு மையத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை.

இந்த நிலையில் சாகுல் அமீது மனைவி பாத்திமா பீபியிடம் அடிக்கடி செலவுக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று மனைவி பணம் தராததால் ஆத்திரமடைந்த சாகுல் அமீது, பாத்திமா பீபி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது.

இதில், பலத்த தீக்காயமடைந்த பாத்திமா பீபியை அருகில் இருந்தவர்கள் மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின்பேரில் ராசிபுரம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து பெயிண்டர் சாகுல் அமீதை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News