வெண்ணந்தூர் அருகே குடிபோதையில் வந்த கணவர் கொலை மனைவி கைது

வெண்ணந்தூர் அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவரை கீழே தள்ளி கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-26 03:30 GMT

கணவமைர கொலை செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்ட வள்ளியம்மாள்

ராசிபுரம் தாலுக்கா, வெண்ணந்தூர் அருகே உள்ள வாய்க்கால் பட்டறை பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (65). கூலித்தொழிலாளி.

இவருடைய மனைவி வள்ளியம்மாள் (55). இவர்களுக்கு புனிதா (17) என்ற மகள் உள்ளார். பழனிசாமிக்கு குடிப்பழக்கம் இருந்தது. அவர் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து வள்ளியம்மாளிடம் தகராறு செய்வது வழக்கம்.

கடந்த 22-ந் தேதி பழனிசாமி வேலைக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பினார். அப்போது அவர் மதுபோதையில் இருந்துள்ளார்.

அதை வள்ளியம்மாள் தட்டிக்கேட்டுள்ளார், கோபமடைந்த அவர் மனைவியை தாக்கியுள்ளார். இதனால் வலி தாங்க முடியாத வள்ளியம்மாள் ஆத்திரமடைந்து கணவரை தடுத்து கையாள் தள்ளவிட்டார்.

அப்போது, நிலைதடுமாறி கீழே விழுந்த பழனிசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அவரை சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில்சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மகள் புனிதா புகாரின் பேரில் வெண்ணந்தூர் போலீசார் இது குறித்து கொலை வழக்குப்பதிவு செய்து வள்ளியம்மாளை கைது செய்து விசாரத்து வருகின்றனர்.

Tags:    

Similar News