கட்டனாச்சம்பட்டி கிராம சபைக் கூட்டத்தில் எம்.பி ராஜேஷ்குமார் பங்கேற்பு

வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், கட்டனாச்சம்பட்டி பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில், ராஜ்சயபா எம்.பி ராஜேஷ்குமார் கலந்துகொண்டு பேசினார்.;

Update: 2022-05-02 02:00 GMT

கட்டனாச்சம்பட்டி கிராம சபைக் கூட்டத்தில், ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார் கலந்துகொண்டு பேசினார்.

கட்டனாச்சம்பட்டி பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்திற்கு, பஞ்சாயத்து தலைவர் தங்கதுரை தலைமை வகித்தார். ராஜ்சயபா எம்.பி ராஜேஷ்குமாகர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக அரசின் திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினார்.

கூட்டத்தில் கட்டனாச்சம்பட்டி பஞ்சாயத்தில், மேற்கொள்ளப்பட்ட தெருவிளக்குகள் அமைத்தல், குடிநீர் விநியோக விரிவாக்கம் செய்ய குழாய்கள் அமைத்தல் உள்ளிட்ட வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்தும், பல்வேறு வரவு, செலவுகளின் விவரங்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டன. மேலும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ள திட்டப் பணிகளின் விவரங்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

நிகழ்ச்சியில், மே தினத்தை முன்னிட்டு, தொழிலாளர்களை சிறப்பிக்கும் வகையில் பஞ்சாயத்தில் பணியாற்றும் தூய்மைப்பணியாளர்களுக்கு, ராஜேஷ்குமார் எம்.பி பொன்னாடை போர்த்தி பரிசு வழங்கினார். கூட்டத்தில் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் துரைசாமி, ராசிபுரம் தாசில்தார் கார்த்திகேயன், பிடிஓ பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News