ராசிபுரம் பகுதியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள்: அமைச்சர் ஆய்வு

இராசிபுரம் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம்களை, அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2021-07-24 03:20 GMT

நாமகிரிப்பேட்டையில் நடைபெற்ற சிறப்பு முகாமில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுவதை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ராசிபுரம் பகுதியில் ராசிபுரம்,வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பல்வேறு அரசு பள்ளிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு முகாம்களில் சுகாதாரத்துறை சார்பில் கொரேனா தடுப்பூசி போடப்பட்டது.

கொரோனா தடுப்பூசி முகாம்களுக்கு, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேரில் சென்று பார்வையிட்டு, தடுப்பூசி போடும் பணிகளை ஆய்வு செய்தார். கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படுவதை அவர் பார்வையிட்டு விபரம் கேட்டறிந்தார்.

பொதுமக்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியில் நின்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த ஆய்வில் டாக்டர்கள் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News