ராசிபுரத்தில் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை
ராசிபுரத்தில் இளைஞர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
ராசிபுரம் டவுன் வி.நகர்-1 பகுதியை சேர்ந்தவர் கணேசன், கூலித்தொழிலாளி. இவருடைய மகன் சிலம்பரசன் (21). இவர் படித்து விட்டு வேலையின்றி வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனால் சிலம்பரசனுக்கும், அவரது பெற்றோருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து சிலம்பரசன் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அதை அவரது பெற்றோர் தடுத்தனர். இந்த நிலையில் பெற்றோரிடம் கோபித்து கொண்டு வெளியே சென்ற சிலம்பரசன் ராசிபுரம் டவுன் சேலம் ரோட்டில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தின் கீழே செல்லும் சேலம்- கரூர் அகல ரெயில் பாதையில் வந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவ இடத்திற்கு சென்ற ராசிபுரம் போலீசார் விசாரணை நடத்தி விட்டு சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தந்தனர். அதன்பேரில் சேலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.