பரமத்தி அகதிகள் முகாமில் பெண் விஷம் குடித்து தற்கொலை: பொதுமக்கள் சாலை மறியல்

அகதிகள் முகாமில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். உரிய நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;

Update: 2021-11-16 08:45 GMT

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தியில் உள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் நகுலேஸ்வரன் (42). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ஜான்சி (33). இவர்களுக்கு பூஜா (15), சரண்யா (13) என்ற 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் ஜான்சி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நகுலேஸ்வரன் பரமத்தி போலீஸ் ஸ்டேசனிலில் புகார் அளித்தார். ஆனால் புகார் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுவுகிறது. நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முகாம் எதிரே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பரமத்திவேலூர் டிஎஸ்பி ராஜாரணவீரன் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட ஜான்சி இறப்பு குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் பரமத்தியில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

Tags:    

Similar News