ஜேடர்பாளையம் அருகே பூட்டிய வீட்டில் பணம், நகை திருட்டு

ஜேடர்பாளையம் அருகே, வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2021-11-01 00:15 GMT

கோப்பு படம் 

ஜேடர்பாளையம் அருகே உள்ள ஆனங்கூரைச் சேர்ந்தவர் பிரபு (30). டூ வீலரில் சென்று துணி வியாபாரம் செய்து வருகிறார். தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் துணி வியாபாரம் செய்வதற்காக பிரபு வெளியூர் சென்று சென்று விட்டார். அவரது மனைவி லாவண்யா, சம்பவத்தன்று இரவு அதே ஊரில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

அடுத்த நாளை காலை, லாவண்யா அவரது வீட்டுக்கு வந்து பார்த்தபோது, கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வந்து, வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவை உடைத்து அதில் இருந்த 2 பவுன் தங்க நகை, ரொக்கம் ரூ. 5 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது சம்மந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணம், நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News