கபிலர்மலை அருகே கார் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி பலி
கபிலர்லை அருகே கார் மோதியதால் மோட்டார் சைக்களில் சென்ற தொழிலாளி உரிழந்தார். அவரது மனைவி படுகாயமடைந்தார்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள, மலையம்பாளையத்தை சேர்ந்தவர் சங்கமித்திரன் (31). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி லதா (27). இவர்கள் இருவரும் தங்களது ஒன்றரை வயது குழந்தையுடன். மோட்டார் சைக்கிளில் பரமத்திவேலூர் அருகே பாலப்பட்டியில் உள்ள லதாவின் தாயார் வீட்டிற்கு சென்றனர்.
பின்னர், மீண்டும் மலையம்பாளையத்திற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பினர். கபிலர்மலை செம்மடை அருகே அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, ஜேடர்பாளையத்தில் இருந்து கபிலர்மலை நோக்கி வந்த கார் ஒன்று, சங்கமித்திரன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் காயமடைந்த சங்கமத்திரன், லதா மற்றும் குழந்தையை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் சங்கமித்திரன் உயிரிழந்தார்.
படுகாயமடைந்த லதா மற்றும் கார் டிரைவர் மகுடேஷ்வரன் ஆகியோர். நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் சிக்கிய ஒன்றரை வயது குழுந்தை அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பியது. இச்சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.