பரமத்திவேலூரில் ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்ட 4 கடைகளுக்கு சீல்!
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில், ஊரடங்கு விதிமுறைகளை மீறிகளை செயல்பட்டு வந்த 4 கடைகளை, அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
பரமத்தி வேலூரில், ஊரடங்கு விதிமுறைகளை மீறி சில கடைகள் செயல்பட்டு வருவதாக போலீசார் மற்றும் டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்திற்கு, தகவல் கிடைத்தது. இதையொட்டி ப.வேலூர் போலீஸ் டிஎஸ்.பி ராஜாரணவீரன் உத்தரவுப்படி, போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் மற்றும் ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சுகாதார ஆய்வாளர் செல்வக்குமார் ஆகியோர் அங்கு சென்று சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது. ப.வேலூர் திருவள்ளூர் ரோட்டில், ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்ட 2 ஸ்டேஷனரி கடைகள், பழைய பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு பேட்டரி கடை மற்றும் அண்ணா சிலை அருகே உள்ள ஒரு பூட்டு சாவி சர்வீஸ் கடை ஆகிய 4 கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். அத்துடன், கடை ஒன்றுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.