ஜேடர்பாளையம் அருகே டூ வீலர்கள் நேருக்கு நேர் மோதல்: கல்லூரி மாணவர் பலி
ஜேடர்பாளையம் அருகே டூ வீலர்கள்நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயமடைந்தார்.;
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுக்கா, கபிலர்மலை அருகே உள்ள செம்மடையாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் விவசாயி. இவரது மகன் விஜய் (19).
இவர் கரூர் மாவட்டம் க.பரமத்தியில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பி.டெக். 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
சம்பவத்தன்று இரவு விஜய் தனது கிராமத்தில் இருந்து ஜேடர்பாளையத்திற்கு மோட்டார் பைக்கில் சென்றுகொண்டிருந்தார். காளிபாளையம் பிரிவு அருகே சென்றபோது எதிராக வந்த மற்றொரு மோட்டார் பைக்கும், விஜய் ஓட்டிச்சென்று பைக்கும் நேருக்கு நேர் மோதிகொண்டன.
இந்த விபத்தில் படுகாயமடைந்த விஜய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த ஜேடர்பாளையம் அருகே உள்ள சரளைமேடு பகுதியைச் சேர்ந்த சக்ரவர்த்தி என்பவரது மகன் ராஜ்குமார் (23) பலத்த காயமடைந்தார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.