பரமத்தி வேலூர் அருகே பெட்டிக்கடையில் இருந்த பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
பரமத்தி வேலூர் அருகே பெட்டிக்கடையில் இருந்த பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்து செல்லப்பட்டது.;
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் இருந்து நாமக்கல் செல்லும் பைபாஸ் ரோட்டில், தனியார் கல்லூரி அருகில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் பெருமாள். இவருடைய மனைவி விஜயலட்சுமி (52). இவர் சம்பவத்தன்று பெட்டிக்கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் விஜயலட்சுமியிடம் பொருட்களை வாங்கிக் கொண்டு ரூ.500-ஐ கொடுத்து சில்லறை கேட்டுள்ளனர். பணத்தை வாங்கிய அவர், மீதி பணத்தை கொடுப்பதற்கு கீழே குணிந்து, பணப்பெட்டியைத் திறந்து பணம் எடுத்துள்ளார்.
அப்போது, மர்ம நபர்கள் இருவரும், விஜயலட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியைப் பறித்துக்கொண்டு, அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றுவிட்டனர். இது குறித்து புகாரின்பேரில் பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.