பரமத்திவேலூர் அருகே கிணற்றில் தொழிலாளி சடலம் ; போலீசார் விசாரணை

பரமத்தி வேலூர் அருகே கிணற்றில் தொழிலாளியின் சடலம் கிடந்தது, இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2021-09-17 10:00 GMT
பரமத்திவேலூர் அருகே கிணற்றில் தொழிலாளி சடலம் ; போலீசார் விசாரணை

பைல் படம்

  • whatsapp icon

கடலூர் மாவட்டம் தேவங்குடி பகுதியை சேர்ந்தவர் அரசன்(40). இவர் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள பாகம்பாளையத்தில் சேகர் என்பவருக்கு சொந்தமான வெல்லம் தயாரிக்கும் ஆலையில் கரும்புவெட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இதனிடையே கடந்த 13ம் தேதி அரசன் திடீரென மாயமானர். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் அதே பகு தியில் உள்ள கிணற்றில் அரசன் சடலமாக மிதந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் ஜேடர்பாளையம் போலீசார் சம்பவம் இடத்துக்கு விரைந்து சென்று அவருடைய உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவர் எப்படி இறந்தார், என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News