சிலம்பம் சுற்றும் போட்டியில் உலக சாதனை படைத்த பரமத்தி மலர் பள்ளி மாணவர்

சிலம்பம் சுற்றும் போட்டியில் உலக சாதனை படைத்த பரமத்தி மலர் மெட்ரிக் பள்ளி மாணவருக்கு, பள்ளியில் பராட்டு விழா நடைபெற்றது.;

Update: 2024-09-13 13:30 GMT

சிலம்பம் சுற்றும் போட்டியில் உலக சாதனை படைத்த, பரமத்தி மலர் மெட்ரிக் பள்ளி எல்கேஜி மாணவர் கௌசிகனைப் பாராட்டி, பள்ளி நிர்வாகத்தினர் பரிசு வழங்கினார்கள்.

சிலம்பம் சுற்றும் போட்டியில் உலக சாதனை படைத்த பரமத்தி மலர் மெட்ரிக் பள்ளி மாணவருக்கு, பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

வஜ்ரம் விளையாட்டு கழகத்தின் சார்பில், நீலகிரி மாவட்டம், குன்னூர் கண்டோன்மென்ட்டில் உலக சாதனை சிலம்பம் சுற்றும் போட்டி நடைபெற்றது. இதில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். இதில், நாமக்கல் மாவட்டம், பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த எல்.கே.ஜி. வகுப்பு மாணவர் கௌசிகன் (3 வயது) கலந்துகொண்டு, 78 நிமிடம் 24 வினாடிகள் தொடர்ந்து சிலம்பம் சுழற்றி உலக சாதனை படைத்தார். இந்த சாதனை ஆர்.பி. உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

பாரம்பரிய கலையான சிலம்பம் சுற்றும் போட்டியில், உலக சாதனை படைத்த மாணவர் கௌசிகனை பாராட்டி, மலர் மெட்ரிக் பள்ளி செயலாளர் கந்தசாமி, பொருளாளர் வெங்கடாசலம், துணைத் தலைவர் ராஜேந்திரன், துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வி தங்கராஜு, இயக்குநர்கள், முதல்வர் ராஜசேகரன், கே.ஜி. வகுப்பு பொறுப்பாளர் கவிதா மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News