நாமக்கல் ஆர்.டி.ஓ. அலுவலக கட்டுமானப்பணி : எம்.பி. சின்ராஜ் திடீர் ஆய்வு

நாமக்கல் ஆர்.டி.ஓ. அலுவலக கட்டுமானப்பணியை எம்.பி. சின்ராஜ் திடீர் என ஆய்வு செய்தார்.

Update: 2023-01-25 10:00 GMT
நாமக்கல் தெற்கு ஆர்.டி.ஓ. அலுவலக கட்டுமான பணியை சின்ராஜ் எம்.பி. இன்று ஆய்வு செய்தார்.

நாமக்கல் தெற்கு ஆர்.டி.ஓ. அலுவலக புதிய கட்டிடம் கட்டுமானப் பணிகளை, நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ் எம் பி.பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் நகரில் இரண்டு வட்டாரப் போக்குவரத்து அலவலகங்கள் உள்ளன. நாமக்கல் கலெக்டர் அலுவலகம் அருகில் நாமக்கல் வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் (டிஎன்28), அரசு கட்டிடத்தில் இயங்கி வருகிறது. நாமக்கல் சேலம் ரோட்டில் முதலைப்பட்டி அருகே வாடகை கட்டிடத்தில், நாமக்கல் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் (டிஎன்88), இயங்கி வருகிறது. வாடகை கட்டடிடத்தில் இயங்கி வரும் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கு அரசு உத்தரவிட்டு நிதி ஒதுக்கீடும் செய்து இருந்தது.

இதன் அடிப்படையில் நாமக்கல் தெற்கு ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு, நாமக்கல் கலெக்டர் அலுவலகம் அருகில், புதிய கட்டிடம் கட்டுவதற்கு, ஏற்கனவே போக்குவரத்துத்துறை அனுமதி அளித்துள்ளது. இதற்காக ரூ. 4 கோடியே 14 லட்சத்து 20 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இன்று  நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சின்ராஜ் திடீரென்று வருகை தந்து, புதிய ஆர்.டி.ஓ. அலுவலகத்தின் கட்டுமானப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கட்டிடத்தின் தரம் குறித்து, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். நாமக்கல் மாவட்ட திஷா கமிட்டி உறுப்பினர் மாதேஸ்வரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

அப்போது கட்டிடம் கட்டுமான பணிகளை விரைவாக தரமாக கட்டி முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதிகாரிகளுக்கு எம்பி சின்ராஜ் அறிவுரை வழங்கினார்.

Tags:    

Similar News