ஜே.கே.கே.நடராஜா பள்ளிகளில் வித்யாரம்பம் நிகழ்ச்சி: புதிய குழந்தைகள் சேர்ப்பு

ஜே.கே.கே நடராஜா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் நடராஜா வித்யாலயாவில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2021-10-16 06:39 GMT

விஜயதசமி விழாவில்  பூஜை செய்யும் ஜே.கே.கே நடராஜா கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி செந்தாமரை.

நவராத்திரி விழாவின் நிறைவு நாளானது விஜயதசமி விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் குழந்தைகளின் கல்வி பயணத்திற்கு பிள்ளையார் சுழி போடுவது வழக்கம்.இதனால், குழந்தைகள் கல்வியிலும், அறிவிலும் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை. கோவில்களிலும், பள்ளிகளிலும், 'வித்யாரம்பம்' எனும் பெயரில், குழந்தைகளின் நாக்கில், 'ஓம்' அல்லது 'அ' எழுத்து எழுதுவது வழக்கம்.

விஜயதசமி விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் ஓம்சரவணா.

ஜே.கே.கே.நடராஜா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் நடராஜா வித்யாலயாவில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் தாளாளர் ஸ்ரீமதி செந்தாமரை கலந்து கொண்டு விஜயதசமியை முன்னிட்டு நடந்த சிறப்பு மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். நேற்று பள்ளியில் சேர்ந்த குழந்தைகளை வரவேற்று அவர்களின் கையை பிடித்து நெல்மணியில் அகரத்தை எழுத வைத்தார்.

வித்யாரம்பம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ஓம்சரவணா.

இந்த நிகழ்ச்சியில் ஜே.கே.கே.நடராஜா கல்வி நிறுவனங்களின் இயக்குனர்  ஓம்சரவணா மற்றும் ஐஸ்வர்யா ஓம்சரவணா ஆகியோர்  உடன் இருந்தனர்.  மேலும் புதிய சேர்க்கை பெற்ற குழந்தைகளின் பெற்றோர்கள், பள்ளியின் முதல்வர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News