குமாரபாளையம் நகராட்சி இடத்தில் விஷ ஜந்துக்கள்: குடியிருப்பு பகுதியினர் அச்சம்

குமாரபாளையம் நகராட்சி இடத்தில் செடி, கொடிகள் படர்ந்துள்ளதால் குடியிருப்புவாசிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.;

Update: 2023-03-13 15:00 GMT

குமாரபாளையம் பாலக்கரை பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் செடி,கொடிகள் புதர் போல் வளர்ந்து, அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் ஏற்பட காரணமாக உள்ளது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பாலக்கரை பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான ஆணையாளர் குடியிருப்பு உள்ளது. இதன் பின்புறம் காலி இடமாக உள்ளது. இதில் செடி, கொடிகள் புதர் போல் வளர்ந்துள்ளது. இதன் அருகில் உள்ள வீடுகளில், இந்த செடி, கொடிகள் படர்ந்துள்ளது. இதன் மூலம் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் குடியிருப்பு பகுதியில் நுழைந்து, பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக புகார் எழுத்துள்ளது.

இது குறித்து நகராட்சி ஆணையாளர் ராஜேந்திரன் வசம் மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பில் நிர்வாகிகள் சித்ரா, விமலா உள்ளிட்ட பலர் மனு கொடுத்து, பொதுமக்களை அச்சுறுத்தி வரும் செடி, கொடிகளை அகற்றியும், அங்குள்ள வடிகாலையும் தூய்மை செய்து தருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

குமாரபாளையம் கிழக்கு காவேரி நகர் பகுதியில் மூன்று மின் கம்பங்களில் தெரு விளக்குகள் இல்லாமல் இருந்தது. இதனால் காவிரி கரையோர பகுதி என்பதால் அடிக்கடி பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துகள் வரத் தொடங்கின. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். பொதுமக்கள் அச்சம் நீங்க, மூன்று மின் கம்பங்களில் புதிய மின் விளக்குகள் அமைக்க மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட செயலர் காமராஜ், மகளிரணி நிர்வாகிகள் சித்ரா, விமலா ஆகியோர் நகராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தனர். இந்த மனுவை பரிசீலித்த நகராட்சி நிர்வாகத்தினர் மூன்று மின் கம்பங்களில் புதிய மின் விளக்குகள் அமைத்தனர். இதனால் மக்கள் நீதி மய்யம் சார்பில் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் உள்ளிட்ட நகராட்சி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Tags:    

Similar News